2024 மே 10 அன்று இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மற்றும் தமிழ்நாடு நிர்வாகிகள் மூலமாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் அவர்களை சென்னையில் நேரில் சந்தித்து பொது சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள அடர் கலவை உப்பை அப்புறப்படுத்துவது சம்பந்தமாக கோரிக்கையான வழங்கப்பட்டது. அது சமயம் DAT சங்கத் தலைவர் திரு.P.காந்திராஜன் மற்றும் பொருளாளர் திரு.B.A.மாதேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
2024 ஜூலை 12 அன்று DAT சங்கத்தின் நிறுவன தலைவர் திரு.சேர்மன் N.கந்தசாமி BABL அவர்களது 17ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
2024 ஜூலை 24 அன்று DAT சங்கத்தில் உள்ள பயிற்சி மையத்தில் இலவச லேப் டெக்னீசியன் முதலாவது பயிற்சி வகுப்பு தேர் தலைவர் திரு.P.காந்திராஜன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2024 ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு பிளானிங் கமிஷன் உறுப்பினர் திரு டாக்டர் எம் விஜயபாஸ்கர் அவர்களிடம் சாயத் தொழிலுக்கு தேவையான கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது.
2024 ஜூலை 10 அன்று DAT சங்கத்தில் அமைக்கப்பட்ட சாயத்துளி சம்பந்தப்பட்ட பயிற்சி மையம் மற்றும் பரிசோதனை கூடம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கௌரவ தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் திரு.A.சக்திவேல் அவர்கள் திறந்து வைத்து ரோபோடிக் ஆட்டோமேட்டிக் டிஸ்பென்சர் வேலை செய்வதை பார்வையிட்டார். அருகில் DAT தலைவர் திரு.P.காந்தி ராஜன் மற்றும் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் திரு.R.பாலசுப்ரமணியம் உள்ளனர்.
2024 ஜூன் 18 அன்று திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திரு.K.சுப்பராயன் MP அவர்கள் DAT சங்கத்திற்கு வருகை தந்து நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்
2024 ஜூன் 9 அன்று திருப்பூர் தெற்கு தொகுதி MLA திரு.K.செல்வராஜ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அருகில் DAT சங்கத் தலைவர் திரு.P.காந்திராஜன் மற்றும் பொதுச் செயலாளர் திரு.S.முருகசாமி உள்ளனர்.
2023 டிசம்பர் 23 அன்று மிக்ஜம் புயலால் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணத்திற்காக ரூபாய் 14 லட்சத்திற்கான காசோலையை வணக்கத்திற்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் திரு.N.தினேஷ்குமார் அவர்களிடம் DAT சங்கத் தலைவர் திரு.P.காந்திராஜன் வழங்கினார்கள். அதுசமயம் பொருளாளர் திரு.B.A.மாதேஸ்வரன் மற்றும் இணைச் செயலாளர் திரு.R.செந்தில்குமார், திரு.K.சுதாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.